வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

வியாழன், 7 ஏப்ரல், 2011

பேரின்பம் என்றால் என்ன?

காலம் காலமாக பேரின்பம் என்பது பெரிதாக நினைக்கப்படுகிறது. நினைக்கப்படுகிறது என்பதை விட அதுவே உண்மையும் கூட.
ஆனால் அதை அடைந்தவர் அனுபவித்தவர் சிலர்.

பேரின்பத்திற்கு பலரும் பல பொருள் கொள்ளலாம் ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை, சித்தர்களை பொறுத்தவரை ஒரு பொருள் தான்.

பெரிதாக சொல்லவேண்டும் என்றால் சிவனை அல்லது இறைவனை கண்டு அவன் அழகிலே ஆடலிலே மயங்கி கிடத்தலே பேரின்பமாகும். சிவனின் அல்லது பிரபஞ்சத்தின் நடனத்தை கண்டு களிக்கலாம். (இது மட்டுமல்ல சொல்லமுடியாத அல்லது சொல்லத்தெரியாத அனுபவங்கள் பல கிடைக்கும் பேரின்பத்திலே. கடைசியில் மரணம் இல்லா பெரு வாழ்வும் கிடைக்கும் )

சின்னதாக சொல்ல வேண்டும் என்றால் ஒளியைக் கண்டு அதனுள் மூழ்கி அல்லது மூழ்கடிக்கப்பட்டு இருத்தல்.

பேரின்பத்தில் எந்தவிதமான அனுபவம் கிடைக்கும் என்று ஏற்கனவே சிலவற்றை சுட்டி காட்டியுள்ளேன் அதற்கான வழிகாட்டி கீழே.

சிற்றின்பத்திற்கும் பேரின்பத்திற்க்கும் என்ன தொடர்பு? வேறுபாடு?

ஆன்மீக பயணத்தில் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...