வாருங்கள் சொந்தங்களே வணக்கம்,
நாட்டால்,இனத்தால்,மதத்தால்,சாதியால் பிளவு பட்டு நிற்கும் மனிதர்களை ஒன்றிணைக்கும் சக்தி மனிதத்திற்கு மட்டுமே உண்டு. மனிதத்தால் மட்டுமே மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். அதுவே உலக அமைதிக்கும்,மகிழ்ச்சிக்கும் வித்திடும். முடிந்தவரை நாம் மனிதத்தை விதைப்போம், வளர்ப்போம். உலகம் அமைதி பெற வழி செய்வோம்.
என்றும் மனிதமுடன்
புரட்சி
(இராச.புரட்சிமணி )

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

காதல் என்றால் என்ன?


உள்ளுடல் அல்லது உடலுள்ள தேவையை  பூர்த்தி செய்ய எழும் உணர்ச்சியே காதல்.
இன்னும் சுருக்கமாக  சொல்ல வேண்டும் என்றால் உள்ளத்  தேவையையும், உடல் தேவையையும் பூர்த்தி  செய்ய இயற்கையாக உண்டாகும் உணர்ச்சியே காதல்.

இது முறையாக பெண் பார்க்கும் பொழுதும் நிகழும்.  இதை திருமண காதல் என்பேன்.  யாரென்றே தெரியாமலும் நிகழலாம். திருமணத்தில் முடியும் காதலே என்னைப்பொருத்த  வரை உயர்ந்தது. 

உள்ளத்தில்   தொடங்கி  உடலில்  கலந்து  மீண்டும்  உள்ளத்தில்  தொடங்கி  என்று  அது  தொடரும். அப்படி  தொடர்ந்தால் தான்  அது  காதல்.  உடலோடு தேவை முடிவடைந்து விட்டால் அது காதல் அல்ல. 

இங்கே உள்ளம், உடல் இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

உள்ளத்தேவையும்  உடல் தேவையும் பூர்த்தியாகத பொழுது, ஒழுக்க உணர்வும் இல்லாத பொழுது  அது கள்ளக்காதலுக்கு வித்திடுகிறது. 

அதீத உள்ள, உடல் தேவை காதலுக்கு எதிரி. 
பிடிக்காமல் நடக்கும் திருமணமும் காதலை உண்டாக்காமல் கள்ளக்காதலுக்கு  வித்திடுகிறது. 

ஒழுக்கமுள்ள  சமுதாயத்தில்  ஒழுங்கீனமானது தான் காதல்(திருமண காதலை தவிர).இருப்பினும் உயிர் உள்ளவரை ஒருவரை ஒருவர் பிரியாது, வேறு துணை தேடாது இருக்கும்பொழுது அது புனிதமாகிறது.

ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற எண்ணமே காதல் திருமணத்திற்கும், திருமண காதலுக்கும் புனிதம் சேர்க்கிறது. மானுடம் செழிக்க புனிதமே அவசியம். 

ஆகையால் புனிதமாக  காதல் செய்வீர். காதலை புனிதமாக்குவீர். 


1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...